பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மால்வரை உடைத்தவன்

. வேலின் பெருமையை நினைத்த புலவர் அதன் வெற்றியைப் பின்னும் சொல்கிருர். வேல் சூர சங்காரம் செய்தது மாத்திரந்தான? திடீரென்று சூர சங்காரம் நடந்துவிடவில்லை. தேவாசுர யுத்தம் என்று பெயர் பெற்ற மகாயுத்தத்தின் இறுதியிலே சூரனே முருகவேள் சங்காரம் செய்தருளின்ை. காவியங்களால் பாராட்டப் பெறுவன முப்பெரும் போர்கள். பாரதபுத்தம், இராம ராவண யுத்தம், தேவாசுர யுத்தம் என்ற அந்த மூன்றை யும் முறையே பாரதமும், இராமாயணமும், கந்த புராணமும் விரித்துரைக்கின்றன. பாரதப் போர் பதி னெட்டு காட்கள் நடைபெற்றது; இராமாயண யுத்தம் மாதங்கள் கடந்தது; சூர சங்காரப்போர் பதினெட்டு பதினெட்டு ஆண்டுகள் நிகழ்ந்ததென்பர். . . . . . . .

நெடும்போராகிய தேவாசுர யுத்தத்தில் எத்தனையோ அரிய வீரச்செயல்களே முருகன் செய்தான். அவனுடைய செங்கதிர் வேல் பல விம்மிதச் செயல்களே நிகழ்த்தியது. அவற்றுள் இறுதியானது சூர்மாமுதல் தடிந்தது. ஆல்ை அதற்கு முன் பல பல வீரச்செயல்கள் விளைந்திருக் கின்றன. சூர சங்காரம் செய்த வேல் என்று ஆரம்பித்த புலவருக்கு அதற்கு முன் கிகழ்ந்த செய்திகள் கினேவுக்கு

வருகின்றன. கதையாய்ச் சொல்வதாக இருந்தால் முதலி. லிருந்து வரிச்ையாகச் சொல்லவேண்டும். இது துதி தானே? ஆதலால் ஒன்றைச் சொன்னவுடன் அதற்கு முன்னலே கிகழ்ந்தது கினேவுக்கு வருகிறது. அதனல் அதையும் சொல்லித் துதிக்கத் தோன்றுகிறது.