பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மால்வரை உடைத்தவன் 47

குருகொடு பெயர் பெற்ற மால்வரையை உடைத்து வழி திறந்தவனே' என்று புகழ்பாடுகிரு.ர்.

நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை!

- (நாவலந்தண் பொழிலாகிய ஜம்பூத்வீபத்தில் வடக்குப் பிர தேசமாகிய அவ்விடத்தில் இருந்த அன்றி லென்னும் பறவை யினலே பெயரைப் பெற்ற கிரெளஞ்ச மென்னும் பெரிய மலேயை (வேலாலே) உடைத்து, மலேயினூடே வழியை உண் டாக்கிய, ஆறு மென்மையான தலையை உடையவனே!

பொழில் - பூமி. ஆயிடை - அவ்விடத்தில். குருகு-பறவை; அன்றில். ஆற்றுப்படுத்த - வழியுண்டாக்கிய. கய - மென்மை; கயந்தலே - மெல்லிய தலையை உடையவனே.) . . . . . . . .

மெல்லிய தலையை உடையவனே என்று சொன்னது, மிகவும் இளையவகை இருக்கும்போதே இத்தகைய வீர 'விளையாட்டை நிகழ்த்திய பெருமான் என்ற வியப்பைப் புலப்படுத்தியபடி இந்தப் பாட்டுக்கு உரையெழுதிய பரிமேலழகர், குழவிப் பருவத்து இவ்விரமெல்லாம் செய்தா யென்னும் கருத்தால் கயந்தலே என்ருர்’ என்று நயம் எழுதியிருக்கிரு.ர்.