பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி பாட்டு 51

கார வேலன் முருகனே உணர்ந்து விட்டவன்போல என்ன என்னவோ சொல்லிப் புகழ்கிருன் உருவம் இல்லாத பெருமானுக்கு உருவமும், உறவில்லாத கடவுளுக்கு உறவின் முறையும்கூறுகிருன். பழங்கதைகளில் உள்ளவற். றையே அவன் சொன்னலும் அறிவு நூல்கள் சொல்லும் உயர்ந்த உண்மை ஒன்றுகூட அவனுக்குத் தெரிவதில்லை. அவன் கூறுவனவற்றை உண்மையென்று சொல்வதா? பொய்யென்று சொல்வதா?’ என்று அவர் சிந்தனை ஒடு கிறது. . . .';

வேலன் எவ்வாறு ஏத்துகிருன்? அவனுக்கும் முருகன் திருவவதார வரலாறு முதலிய கதைகள் தெரியும். புராணப் பகுதியை மாத்திரம் அறிந்தவன் அவன். அதற்கு அப்பால் உள்ள தத்துவப் பகுதியை அறியாதவன். அவன் செய் யும் துதிகளில் முருகவேள் உருவ வருணனையும் அவதாரப் பெருமையும் வருகின்றன. . . . . . .

ஆறு மெல்லிய திருத் தலைகளே உடையவன் முருகன்; பன்னிரண்டு திரண்ட தோள்களையுடையவன்; அத்தோள் கள் முழவைப் போல் திரண்டு உருண்டு அழகாக இருக் கின்றன. அவனுடைய திருமேனிச் சோதி கண்ணேப் பறிக்கிறது. இளங்கதிரவனுடைய சோதிபோல வீசுகிறது. உதயமாகி எழுந்த சூரியனுடைய சோதி காட்சிக்கு இனிய தாக இருக்கும். முருகன் திருமேனிச் சுடர் கண் பொறுக் கும் அளவுக்கு விளங்குகிறது. முருகன் திருவவதாரம் செய்த இடம் நாணல் அடர்ந்த சரவணப் பூம்பொய்கை. அங்கே தாமரைப் பூவினிடையே அவன் எழுந்தருளினன். நளினமலரின்கண்ணே உருப்பெற்றுத் தோன்றியபோது அவனுடைய பேரழகுக்கும் இளமைக்கும் மென்மைக்கும். ஏற்ற ஆதனமாக அந்தத் தாமரை அமைந்தது. மணங் கமழ் தெய்வத்து இளநலம் உடையவன் முருகன். மணமும்

தெய்வத் தன்மையும் இளமையும் அழகும் ஆகிய இப்