பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெரும் பெயர் முருகன்

பண்புகளே முருகு என்ற சொல் குறிக்கும். முருகன் இவ் வளவையும் உடையவன். மலர்களுக்குள் தெய்வத் தன்மை உடையதாகப் புகழ் பெற்றது தாமரைப் பூ மணமும் அழகும் மென்மையும் உடையது அது. ஆகவே அதுவும் முருகுடைய மலராயிற்று. அதன்கண் முருகுத் தெய்வம் தோன்றியது. இந்த இயல்புகளே வேலன் பிறர் சொல்லக் கேட்டிருக்கிருன். பரம்பரையாக முருகனைப் பற்றிப் பெரியோர் சொல்லி வந்த சிறப்புக்களே அவன் உணர்ந்த வன். ஆகவே அவன் செய்யும் துதியில் அவன் அறிந்த இந்தப் பண்புகளே வைத்துப் பாடுகிருன். .

மூவிரு கயந்தல முந்நான்கு முழவுத்தோள் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை

. (ஆறு மெல்லிய தலைகளையும் பன்னிரண்டு முழவு போன்ற தோள்களையும் கதிரவனது எழுச்சி பெற்ற நிறத்தின் அழகையும் தாமரையினிடம் தோன்றிய தோற்றத்தையும் உடையாய் ஏர். எழுச்சி. தகை - அழகு.) - . பிற தெய்வங்களிடம் காணுத தோற்றத்தைச் சொல்கிருன் வேலன். ஆறு முடியும் பன்னிரு தோள்களும் முருகனுக்கே உரியன. ஞாயிறு போன்ற அவன் எழிலைப் புலவர்கள் பலர் பாராட்டி யுள்ளார்கள். நக்கீரர் தாம் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் எடுத்த எடுப்பில், 'உதய சூரியனது பேரொளியை ஒத்த ஒளியை உடையவன்' என்று போற்றுகின்ருர்,

. உலகம் உவப்ப வலன்னர், திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு - ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி

என்பது அவர் பாட்டு.