பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி பாட்டு 53

முருகனுடைய திருவுருவ வருணனையோடு வேலன் நிற்பதில்லை. அக்கடவுளுடைய பிற வரலாறுகளும் அவனுக்குத் தெரியும். உலகத்தையெல்லாம் சங்காரம் செய்யும் பரமனுக்குத் திருமகன் முருகன் என்பது அவன் அறிந்த செய்தி. முருகனுடைய திருமேனி செஞ்சோதி வீசுவதாதலின் அவனுக்குச் செவ்வேள் என்ற திரு நாமம் இருப்பதையும் வேலன் அறிவான். மக்கள் விரும்பும் அழகும் சிறப்பும் இயல்புகளும் முருகன்பால் உள்ளன. எல்லா நலன்களும் சான்றவன் அவன். யாவருக்கும் மிக்கவன்; தலைவன். . . . .

காஅய் கடவுள் சேஎய், செவ்வேள், சால்வ, தலைவ!

(உலகத்தை அழிக்கும் சிவபெருமானுடைய திருக் குமாரனே, செவ்வேள்ே, எல்லா நலன்களும் அமைந்தவனே, தலைவனே!) -

சிவகுமாரனும் செவ்வண்ணப்பிரானும் குண மலேயும் பிரபுவுமாகிய முருகனே வேலன் போற்றுகிற விதம் இப்படி. அவன் முருகனைப் பூசைசெய்து நடத்தும் விழாவாகிய வெறியாட்டு மகாகோரமானது. தினை பரிசியை இரத்தத்தில் கலந்து வைத்திருக்கிருன். எங்கே பார்த்தாலும் சிவப்பு மலர்கள், எல்லாம் இரத்தத்தை நினை வூட்டும். போதாக் குறைக்கு ஆட்டை அறுத்துப் பலி யிடுகிருன். சுத்தசத்துவ மூர்த்தியாக முருகனைத் தியா, னிப்பவர்களுக்கு இந்தச் சூழலை கினைத்தாலே குல நடுங்கும். பழக்கமில்லாதவர்கள் இந்தப் பூசாரி பண்ணு கிற அட்டகாசங்களைக் காண நேர்ந்தாலும் அப்படியே நடுங்குவார்கள், குழந்தைகளும் மகளிரும் நடுங்குவதைக் கேட்க வேண்டுமா? அவன் இடி இடித்தாற்போலக் கத்துவதும், உடுக்கையை அடித்து ஆடுவதும், இந்த இரத்தச் சூழலும் ஆகிய எல்லாம் அந்த இடத்தை