பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 . பெரும் பெயர் முருகன் பொருந்துமா? சிவபிரான் யார்? முருகன் யார்? ஒரே

கடவுளுக்கு வேறு வேருகச் சொல்லும் பெயர்களே. அல்லவா? இவர்களுள் யார் தந்தை? யார் புதல்வன்?

இப்படி யோசித்துக்கொண்டே போனல் அந்தப் பயங்கர வெறியாடலே நடத்தும் பூசாரியின் வார்த்தைகள், அத்தனையும் பொய்யென்றே படுகின்றது; அவை உண்மையல்ல என்றே தோன்றுகிறது. ; 、

உண்மை அல்லவானுல், மற்றவர்கள் கூட அப்படி ஏத்துகிருர்களே! வேதம் உணர்ந்தோரும் சாத்திரப் பொருள் தெரிந்தோரும் முருகனை ஆறுமுகன் என்றும் சிவகுமாரனென்றும் சொல்கிருர்களே! அவர்கள் உண்: மைப் பொருளைப் பற்றிக் கற்றுத் தேர்ந்தவர்கள். அவர்கள் பொய்யை எதற்காகச் சொல்ல வேண்டும்? . ஆகவே அவை பொய்யென்றும் சொல்லிவிடக் கூடாது. . - - " மற்ருெரு விஷயம்: வேலன் உரக்கக் கத்தி ஏத்தில்ை முருகன் ஆவேச ரூபத்தில் எழுந்தருளுகிருன். வேலவனும் குறவரும் மழை வேண்டுமென்று வேண்டுகிறர்கள்; மழை பெய்கிறது. நல்ல பயிர் விளையவேண்டுமென்று. தொழுகிறர்கள்; அப்படியே விளைகிறது. அதிகமாக மழை பெய்துவிட்டது; நிற்கவேண்டுமென்று வேண்டிக் கொள்கிருர்கள்; மழை நிற்கிறது. இவ்வளவு காரிய்ங் களும் நளினத்துப் பிறவியை’ என்பது முதலிய தோத் திரங்களின் பயனுகக் கண்முன்னே நிகழும் பயன்கள். அவர்கள் வேண்டுகோள் பயன்பெறுதலின் அவற்றைப் பொய்யென்று எப்படிச் சொல்வது?.

பொய்யென்ருே, மெய்யென்ருே வரையறையாகச் சொல்ல முடியவில்லை; ஆகவே புலவர் மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறர். 'வேலன் ஏத்தும் வெறிப்