பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையா, பொய்யா?

வேலகிைய பூசாரி பாடும் பாட்டில், அவன் பரம்பரை பரம்பரையாகக் கேட்டறிந்த செய்திகள் அன்பிலுைம் ஆவேசத்தாலும் முழக்கி வெளியிடுகிருன். ஆறு திருமாமுடிக்காரப் பெருமானே, ஆறிரண்டு திருக்கரக்காரப் பெருமானே, செங்கதிரவனைப் போன்ற திருமேனிப் பெருமானே, தாமரையில் தோன்றிய பெருமானே, சங்காரமூர்த்தியின் சிங்காரக் குழந்தைப் பெருமானே, செவ்வண்ணப் பெருமானே, செவ்வேளே’ என்று அந்த வேலன் புங்கானுபுங்கமாகப் புகழ்கிருன்; அழைக்கிருன்; ஆவேசம் கொண்டு கர்ஜிக்கிருன். இந்தப் பயங்கரமான விழாவில் வேலன் ஏத்தும் வெறிப்

பாட்டு ஒன்ரு, இரண்டா? எத்துணையோ உண்டு.

......எனப் பேஎ விழவினுள் வேலன் ஏத்தும் வெறியும் உளவே!

(என்று, அச்சத்தை உண்டாக்கும் வெறியாட்டு விமாவில் பூசாரி புகழ்ந்துபாடும் வெறிப் பாட்டுக்களும் உள்ளன. பேஎ அச்சம். வெறி வெறியாட்டில் பாடும் பாட்டு.

இப்படிப் பாடும் பாட்டின் பொருளில் மனசைச் செலுத்திப் பார்க்கலாம். அநாதியாக இருக்கும் பிரமமாகிய முருகவேள் நளினத்திலே பிறந்தான் என்று சொல்வது உண்மையாகுமா? உருவங் கடந்த ஒரு தனிப்பொருளே ஆறுமுகம், ஆறிரண்டு கை உடையவன் என்பது கியாயமா? சிவபெருமானுக் குப் பிள்ளை என்று சொல்கிருனே, வேலன், அது.