பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரக் கதை

அப்பனே, முருகா, பூசாரியின் பாட்டிலே திருவுளம் மகிழ்ந்து குறிஞ்சி கிலத்தினருக்கு வேண்டியவற்றை வேண்டியபடி நல்கும் கடவுளே, உன்னுடைய தத்துவம் உணர்வதற்கு அரியதாக இருக்கிறதே! வேலகிைய பூசாரி உன்னத் தங்கள் காரியங்களுக்கெல்லாம் துணை யாக அன்ருே கினேக்கிருன்? அவனுக்கும் பிறருக்கும் இனியவனாகவும் எளியனுகவும் வரும் உன் இயல்பை

எவ்வாறு வரையறை செய்வோம்! இழிதொழிலையும். இழிந்த வாழ்க்கைப் போக்கையும் உடையவர்களென்று மக்கள் போற்றும் கூட்டத்தில் பிரசன்னமாகிருயே! யுேம் இழிந்த கிலேயை விரும்புகிறவன?......ஆம், வைத் தது சட்டம். உன் ஆணேப்படி நடப்பது உலகம். நீ எது செய்கிருயோ அதற்கு மிஞ்சியது ஒன்றும் இல்லை. உன்னை பன்றி வேறு எல்லையை இல்லாதது இந்த உலகம்; உன்னேயே வரம்பாக, தெய்வமாக, பாதுகாக்கும் அரணுக உடையது. ஆகவே உன் திருவுள்ளம் எப்படியோ அப்படி யெல்லாம் இருக்கும் உரிமை உனக்கு உண்டு.

இயற்கையாகப் பல்வகைச் சிறப்புக்களேயும் உடைய, k, ஏழைகளுக்கு அருள்பாலிக்க வேண்டுமானல், அந்தச் சிறப்பையெல்லாம் ஒரு பக்கம் முட்டை கட்டிவைத்து விட்டு வருவாய். யோக இறங்கி வருகின்ற எளிமை அது. யாரும் உன்னை அப்படி இழிந்து வா என்று வற்புறுத்த இயலாது, என்றும் குன்ருத சிறப்பை உடை யவனே, உன்னேயே வரம்பாக உடையது உலகம். அப்படி இருக்க, நீ உனக்கு உரிய சிறப்பை யெல்லாம் நீக்கிவிட்டு: வந்தால் அது உன் திருவுள்ளம்,