பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரக் கதை * - 6% நீளுதிய சாலினி யென்னும் பெயர் பெற்ற அருந்ததி முட்டும் யாக சேஷத்தை உண்ணவில்லை. தலைக்கற்

புடையவளாதலின், அவ்வாறு செய்யும்படி முனிவரும்

தடவு நிமிர் முத்தீப் பேணிய மன்எச்சில் வடவயின் விளங்குஆல் உறை எழு மகளிருள் கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய - அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர். |யாககுண்டத்திலே பொங்கி எழுந்த முத்தியிலே போற்றி - திட்ட அந்த அவியின் சேடமாகிய புரோடாசத்தை, வானத்தில் வடதிசைக்கண் விளங்குகின்ற ஏழு முனிபத்தினிகளுள் தெய் வத்தன்மை பொருந்தியமைந்த ஒப்பற்ற கட்சத்திரமாகிய அருந்ததி நிற்க, கிருத்திகை நட்சத்திரமாக உறைகின்ற மற்ற ஆறு பேர்களும், யாக சேஷமாக கின்ற அந்த நிலையில் அக் கருவை நுகர்ந்தனர். தடவு-யாககுண்டம். மன்: அசை. ஆல்ஆரல், கிருத்திகை சாலினி-அருந்ததி. அறுவர் மற்றை யோரும் என்பதை மற்றையோர் அறுவரும் என்று கொள்ளவேண்டும்.) அப்படி உண்ட கிருத்திகை மாதர் அறுவரும் கருப்பம் அடைந்தார்கள். இறைவன்பால் தோன்றிய கருவாதலின், வேள்வித் தீயில் இட்ட பிறகும் ஆற்ற லுடையதாக அமைந்தது; அதனைத் தம்முடைய கணவ ருடைய கட்டளைக்கு இணங்க உண்டமையின் அம் மகளிர் மறுவில்லாத கற்பை உடையவரானர்கள். தம்முடைய நிறைக்கு யாதொரு குறையும் நேராமல் முருகனச் சூலாகக் கொண்டார்கள். முருகன் இறைவனுடைய அமிசமாகக் கார்த்திகை மாதர் கருவிலே தங்கியிருந்தான்.

மறுவறு கற்பின் மாதவர் மனைவியர் நிறைவயின் வழாஅது நிற்கு லினரே. (குற்றமற்ற கற்பின உடைய முனிவருடைய மக் ஆறு பேரும் தமக்குரிய கிறையினின்றும் ,