பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B6 பெரும் பெயர் முருக்ன்

வார்களோ? இருந்தவாறே நுகர்வதைவிட அக்கினியி னிடம் வேள்வி மூலம் வழங்கிப் பின் வேள்விப் பிரசாதத் தைக் கொடுத்து நுகரச் செய்யலாமே!’ என்ற சிந்தனை உண்டாயிற்று. ஆகவே அழலே வேட்டு அதன்கண் அவியாக அந்தக் கருவைப் பெய்தார்கள்.

வசித்ததைக் கண்டம் ஆக மாதவர் மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற் சாலார், தானே தரிக்கென அவர் அவி உடன் பெய் தோரே, அழல் வேட்டு.

'இறைவன் சிதைத்ததைச் சிறுசிறு கண்டமாக முனிவர் தம் மனைவியர் துகர்ந்தால் அது கிறைவு பெறும்போது அக்கண்டம் உருப் பெறுகையில் அதனைத் தாங்கும் வன்மையைப் பெற மாட்டார்கள், ஆதலின் அக்கினியே தாங்குவாகை என்று எண்ணி, அம்முனிவர் அழல் வேட்டு அந்தக் கருவாகிய அவியை ஒருங்கே இட்டனர். வசித்ததை-சிதைத்த கருவை. வசி தடிசேதித்த கருப் பகுதி. சமைப்பின்-உருப்பெற்ருல் சாலார் . தாங்கும் தகுதியைப் பெற மாட்டார்.) -

அப்படி வேள்வி செய்தபோது யாக குண்டத்தில் எழுந்த முத்தியில் போற்றியிட்ட அவியில் அழலிலே, சென்றது போக எஞ்சிய பகுதியாகிய பிரசாதத்தை முனிவர் தம் மனேவியருக்கு வழங்கினர். வடக்கே கிருத்திகை நட்சத்திரமாக ஆறு மகளிர் விளங்குகின்றனர். ஏழு முனிவர்களுடைய கூட்டமாகிய சப்தரிஷி கட்சத்திரம், என்ற ஒரு தொகுதியும் உண்டு. அதன் அருகே அருந்ததி கட்சத்திரத்தை வானிலே காணலாம்.

முனிவர் இந்தப் பிரசாதத்தை வழங்கியபோது அருந்ததி ஒழிந்த ஆறு மகளிரும் நுகர்ந்தனர். அந்த ஆறு பேரும் கிருத்திகைக் கூட்டத்தைச் சேர்ந்தவர். கிருத்தி கைக்கு ஆரல் என்று ஒரு பெயர். அது ஆல் என்றும் சிதைந்து வழங்கும். தெய்வத் தன்மை பெற்ற ஒரு