பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரக் கதை 69

ஆனல் சரவணப் பொய்கையை அடையுமட்டும் முருக னைப் பற்றிய கதை வெவ்வேறு காலத்தில் வெவ்வேருக வழங்கி வந்தது. இறைவனிடத்திலே தோன்றிய கருவை வாயு பெற்றுச் சென்று அக்கினியினிடம் கொடுக்க அக்கினி கங்கையிலே விடக் கங்கை சரவணப் பொய்கையிலே விட்டாள் என்பது ஒரு கதை. இறைவன் விழியில் உண் டான அமுற்பொறிகள் இவ்வாறு சென்று சரவணப் பொய்கையில் தங்கிக் குழந்தையாயின என்பது ஒரு வரலாறு. கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த் தனர் என்று கந்தபுராணம் முதலிய நூல்கள் கூறும்.

பரிபாடலில் வரும் கதை பழங்காலத்தில் வழங்கிய தென்று தெரிகிறது. என்ப' என்று புலவர் சொல்கிருர். 'என்று சொல்வார்கள்' என்பது பொருள். பெளராணிகர்

சொல்லுவர்' என்று பரிமேலழகர் உரை கூறினர். அவ்வாறு வழங்கின துண்டென்று வால்மீகி ராமாயணம், குமாரசம்பவம் முதலிய வடமொழி நூல்களாலும் தெரியவரும்.

காலத்துக்குக் காலம் மனிதருடைய மனோபாவம் மாறி வரும். ஒரு காலத்தில் பொய்யை எந்தக் காரியத்துக்கும் சொல்லக்கூடாதென்ற கியதி இருக்கும்; பிறகு சில காரி யங்களுக்குப் பொய் சொல்லலாம் என்று மாறுதல் உண். டிாகும். ஒழுக்க வகைகளிலும் இத்தகைய மாறுபாடு களே நாம் பார்க்கின்ருேம். தெய்வத்தைப் பற்றிய கதை களில் நாம் விரும்பத்தகாத செய்திகள் இருந்தால் அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று தோன்று. வது இயல்பு. ஆகையில்ைதான் முருகன் திருவவதாரக் கதை இவ்வாறு வெவ்வேறு விதமாக வழங்குகிறது. இது மாத்திரமன்று; புராணக் கதைகளே அந்த அந்தக் காலத் துக்கு ஏற்ப மாறி வழங்குகின்றன. பெரிய இதிகாச மாகிய இராமாயணத்தில் வரும் கதை எந்தக் காலத்திலும் ஒரேமாதிரி வழங்குவதில்லை. தேசத்துக்குத் தேசம்