பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெரும் பெயர் முருகன்

காலத்துக்குக் காலம், பாஷைக்குப் பாஷை வேறுபட்டு, வழங்கும். எல்லாவற்றிலும் உட்கருத்தாக அமைந்த தத்து, வத்தை நாம் உணரவேண்டுமே ஒழிய அதனை அப்படியே. சரித்திரமாக, ஒவ்வொரு செய்தியும் அப்படி அப்படியே. நிகழ்ந்ததென்று கொள்ளக்கூடாது. r

முருகனுடைய திருவவதாரக் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை ஒன்று. சிவபெரு மானது அமிசமாக முருகன் தோன்றினன். அவனுடைய அவதாரம் ஏனைய குழந்தைகள் பிறக்கும் முறையில் அமைந்தது அன்று. இறைவனுடைய முதன்மையும் அவ. னுடைய அருள் உரமும் முனிவருடைய ஞானமும் மகளி ருடைய கற்பும் வேள்வியின் தியாகமும் கலந்து அமைந்த தெய்வப் பிழம்பு முருகன். இதையே கதையாக்கிப் புராணமாக்கிக் கவியாக்கி விரித்தனர் பழங்கால மக்கள்.

கதையில் உள்ளபடியே நிகழ்ச்சிகள் நடந்திருந்தால் அந்தக் கதை உண்மை வரலாருகிவிடும். உண்மை எப்போதும் ஒன்றுதான். கதை பலவாருக வழங்குவத ேைல அது அப்படியே நடந்த உண்மை அன்று என்பது புலப்படும். ஆயினும் இவற்றினூடே பொதுவாக உள்ள கருத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ; : . .

இன்ப கிலேயமாகிய பரமசிவம் வேறு, முருகன் வேறு. அல்ல; அருளுருவாகிய பராசக்தியின் தொடர்பு முருக னுக்கு உண்டு; ஞானம் படைத்த முனிவர் முயற்சியாலே. தோன்றுவான்; கற்புடை மகளிர் கற்பு விரதத்தின் பயனுக வருவான். இவ்வாறு பலபடியாக இந்தக் கதைக்குப் பொருள் கூறலாம். . . . . . .

முருகன் என்ற தெய்வத் திருவுருவத்தைப் பற்றித் தமிழர் நெடுங்காலமாகச் சிந்தித்து வந்தித்து வந்திருக்" கிருர்கள். அவனைப் பற்றிக் கதை பேசிக் களித்திருக்கிருர், கள் என்பதையும்.காம் உணர்ந்து கொள்கிருேம்.