பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்வரம்பு இகந்தோன்

இந்திரன் தேவலோகத்துக்குத் தலைவன்; பல பொருள்களைப் படைத்தவன். புண்ணியத்தால் வரும் போகங்களைத் தேவர்கள் துய்க்கிருர்கள். அவர்களுக் குள்ளே சிறந்து தலைமைப் பதவி வகிப்பவனதலால், அவன் போக நுகர்ச்சியிலும் யாவரினும் சிறந்தவனக இருக்கிருன். அதனால் அவனுக்குப் போகி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. z

கையிலே பொருள் உடையவருக்கு வேறு யாரேனும் அதைக் கைப்பற்றிக் கொள்வார்களோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும். மடியிலே கனம் இருந் தால் வழியிலே பயம் உண்டு’ என்ற பழமொழி இக்கருத் தையே வெளிப்படுத்துகிறது. உலகத்துப் பொருளுடை யவரே இவ்வாறு அஞ்சுவதானால் எல்லா ஐசுவரியத்துக்கும் மேலான ஐசுவரியத்தையும் போகத்தையும் பெற்ற இந்தி ரனுக்கு எவ்வளவு அச்சம் இருக்கவேண்டும்? ஒவ்வொரு கணமும் அவன் தன் பதவி தனக்கு கிலேத்திருக்க வேண்டுமே என்ற கவலையோடே இருக்கிருன். அவன் இறைவனைத் தரிசித்து வழிபடுவது கூட முத்தி பெற வேண்டும் என்ற ஆசையினால் அன்று. தன் பதவிக்கு மோசம் வராமல் இருக்கவேண்டுமென்ற பிரார்த்தன . தான் இறைவன் திருமுன்னர் அவனுக்குத் தோன்று கிறது. " . . . . . . . . . . . ..

- வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கிருர்,