பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெரும் பெயர் முருகன்

யாரேனும் யாகம் செய்தாலும் தவம் புரிந்தாலும் தன் பதவியைப் பற்றிக்கொள்ளத்தான் அவற்றைச் செய்வ. தாக எண்ணி, இடையூறு செய்ய கினைப்பவன் இந்திரன். நூறு யாகங்கள் செய்து இந்திர பதவியைப் பெற்றவன் அவன். அதல்ை சதமகன் என்று ஒரு பெயர் அவனுக்கு வழங்கும். ஒரு யாகம் ஒருவன் செய்தாலே, இவன் நூறு , யாகம் செய்து விட்டால் என்ன செய்வது என்ற தலைவலி அவனுக்கு வந்துவிடும். அதிக ஆற்றல் படைத்தவன் யாராவது இருந்தால், ஒருகால் அவன் தன்னோடு போர் புரிந்து தன் பதவியைக் கைக்கொண்டு விடுவானே என்ற அச்சம் அவன் உள்ளத்தில் முளைக்கும். இவ்வளவுக்கும் காரணம் அவனுக்கு இருக்கும் பதவியாசை தான்.

சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகச் சிவ பிரானுடைய அமிசம் தோன்றியது, இந்திரனுக்கு அச் சத்தை உண்டாக்கிவிட்டது. அக்குழந்தைகளின் மூலத்தை உணராமல் அறுமீன் புதல்வர் என்ற அறியாமையால் அவன் அஞ்சின்ை. அருண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்பது பழமொழி அல்லவா? .

உதயமான அன்றே, அச்சத்தால் கலங்கிய அமரர் செல்வன் அங்கே வந்து தன் வச்சிரத்தை அக் குழந்தை களின் மேல் எறிந்தான். அறகிலே கடந்து, எழுமுனிவருக், குத் தான் முன்பு சிவபிரான் அமிசத்தை அளித்ததையும். மறந்து, எரியுமிழ் வச்சிரத்தை எறிந்தான். |

என்ன ஆச்சரியம்! இந்திரனுடைய வச்சிராயுதம் பேராற்றலே உடையது. மலேச்சிறகை அறுத்தது. எதன் மேல் விட்டாலும் அதைக் கூறுகூருகப் பிளந்தெறியும் , வன்மையை உடையது. அத்தகைய வச்சிராயுதத்தை இந்திரன் விட்டபோது என்ன ஆயிற்றுத் தெரியுமா? சர. வணப் பொய்கையிலே தோன்றிய பச்சிளங்குழந்தைகளே, ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு பொருளைப் பல துண்டு.