பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


”பழைய கோமாளி ஒருவர், மற்றொரு பழைய கோமாளியோடு கைகுலுக்கினார்; அவ்வளவுதான்” என்றார் ஷா.


இயற்கைக்காட்சி ரசனை

ஒரு சமயம் ஷா, ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் அருகில் மற்றொருவர் உட்கார்ந்திருந்தார்.

வழியில் காணும் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து அளவுக்குமீறி வர்ணித்துப் புகழ்ந்து கொண்டிருந்தார் அருகில் இருந்தவர். அடுத்து, எழில்மிக்க ஒரு குன்று காணப்பட்டது. “ஆகா! என்ன இயற்கையின் எழில் இதை ரசிக்க எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாமே” என்றார் அவர்.

ஷாவுக்கு அவர் கூறியவை தலைவலியாக இருந்தது; பொறுமை இழந்தார். உடனே விரைவாக எழுந்து அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார் ஷா.

ரயில் உடனே நின்றது. ரசிகரோ ஒன்றும் புரியாமல் விழித்தார்.

“நண்பரே, இதற்கு ஐந்து பவுன்தான் அபராதம் கட்ட வேண்டும்! நீங்கள் அதைக் கொடுத்துவிட்டு, அந்த