பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

45




தினசரிக் கடமை

தினமும் ஐந்து பக்கங்கள் எப்படியும் எழுதிவிடுவார் ஷா. அதை ஒரு தினசரிக் கடமையாகவே கொண்டிருந்திருக்கிறார்.

ஏதோ அசெளகரியத்தால் ஒரு நாள் எழுத இயலாமல் போனால், மறுநாள் அதையும் சேர்த்து எழுதிவிடுவது வழக்கம்.

பழக்கவழக்கம்

தமக்கு வரும் கடிதங்களுக்கு உடனுக்கு உடன் பதில் எழுதி விடுவது அவருடைய பழக்கம். எழுதியக் கடிதங்களை தாமே அஞ்சல் நிலையத்துக்குப் போய், பெட்டியில் போட்டு வருவரையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அலங்கோலமான அறை

ஷா தங்கி இருந்த அறை மிகச் சிறியது; கண்ட இடம் எல்லாம் தும்பும், தூசியும் படிந்திருந்தன. எல்லாம் ஒழுங்கு இல்லாமல் கிடந்தன.

பகல், இரவு, பனிக்கலாம், குளிர்காலம், எதுவானாலும் எப்பொழுதுமே ஜன்னலைத் திறந்தபடியே வைத்திருப்பது ஷாவின் வழக்கம். அதனால் தூசி வெளியிலிருந்து வந்தபடியே இருந்தது.