பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



44

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்


சான்று அளித்து, ஆரிஸின் மனைவிக்காவது உதவியாக இருக்கட்டும் என்று முயன்றார். தாமே திருத்திய தம்முடைய வரலாற்றைப்பற்றி ஒருவரிடம் குறிப்பிட்ட போது, “ஆரிஸ் எழுதிய ஷாவின் சுயசரிதம்” என்று கூறினார்.

வேடிக்கை மனிதர்

ஷா எப்பொழுதும் எளிமையாகவே இருக்க விரும்புவார். அவருடைய உணவு,உடை ஆகியவற்றில் எளிமை விளங்கும், தம் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையும் பழங்களையும் உணவாகக் கொள்வார்.

மது, மாமிசம், புகை முதலான எதையும் அவர் தீண்டியதே இல்லை.

பெரும்பாலோருக்குப்புரிந்துகொள்ள முடியாத புதிரான மனிதராகவே ஷா விளங்கினார். அவருடைய வேடிக்கையான பேச்சும், கிண்டலும் அவருடைய பெருந்தன்மையை மூடிமறைத்து விட்டன. எள்ளி நகையாடும் சொற்களால் பிறரைத் தாக்குவதையே ஒரு கலையாக அவர் கொண்டிருந்ததால், அவர் இரக்கமற்றவர் என்று பலரும் எண்ணிவிட்டார்கள். அவரோடு பல ஆண்டுகள் பழகிய எல்லென் அம்மையார் “நல்லவர், அன்பானவர், பெருந்தன்மையானவர்” என ஷாவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் இது பலரும் நம்ப முடியாத பாராட்டாக - வியப்பாக இருக்கிறது.