பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

43


பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். நாடகங்களுக்கு மதிப்புரை எழுதுவதற்காக ஷாவை அவர் நியமித்துக்கொண்டார்; அப்போதுதான் G.B.S. (ஜார்ஜ் பெர்னார்ட்ஷா) என்ற மூன்று எழுத்துக்கள் ஷாவைக் குறித்து உலகம் முழுவதும் அறிய முற்பட்டன. ஷாவின் புகழ் பரவுவதற்கு முதன் முதலில் ஆரீஸ் காரணமாக இருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஷா, ஆரீஸுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த உலகத்தில், எந்தப்பகுதியிலாவது நீங்கள் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் வரையில் அந்தப் பத்திரிகையில் என்னுடைய கட்டுரைகள் வெளிவரும் என்று நீங்கள் தயங்காமல் எதிர்பார்க்கலாம்” என்று தம்முடைய நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்.

ஷாவை உலகுக்கு அறிமுகப்படுத்திய அந்த ஆரிஸ் பிற்காலத்தில் வாழ வழியின்றி துன்புற்றார். பத்திரிகைத் தொழிலில் அவருக்கு இடம் இல்லாமல் வருந்தினார்.

ஆஸ்கார் ஒயில்டைப் பற்றியும், ஷாவைப் பற்றியும் வரலாறுகள் எழுதிப் பணம் சேர்க்கலாம் என்ற முயற்சியில் ஆரிஸ் ஈடுபட்டு வந்தார். முயற்சி முடிவடையும் முன் வறுமையில் வாடி, வருந்தி, இறந்து போனார்.

அந்த வரலாற்று நூல்கள் இரண்டையும் ஷா பார்த்துத் திருத்திக் கொடுத்து, அவை உண்மையான நூல்கள் என