பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



42

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



சகலமும் அறிந்தவர்

எல்லாவற்றையும் பேசக்கூடிய திறமைசாலி. அதனால் அவருக்கு தேனீர் விருந்துகள் காத்திருக்கும், யாருடனாவது அவர் பழகினார் என்றால், அந்த வீட்டுச் சிறுவர், சிறுமியருக்கு ஏற்ற பள்ளிக்கூடம் எது என்று சொல்வார்; அந்த வீட்டாருக்கு தகுந்த உணவு முறைகளைக் கூறுவார். குடும்பச் சிக்கல்களுக்கு வழக்கறிஞரைப்போல் ஆலோசனை சொல்வார்; மதத் தலைவரைப் போல் நீதிநெறிகளை எடுத்துக்கூறுவார்; மருத்துவரைப்போல் உடல்நிலைக்கு ஏற்ற முறைகளைச் சொல்லுவார்; தையல் கலைஞரைப் போல் பொருத்தமான உடை வகைகளைத் தெரிவிப்பார். பிறகு குழந்தைகளோடு சேர்ந்து அவர்களைப் புரட்சிக்குத் தூண்டிவிடுவார்; அதுவும் முடிந்த பின்னர், வேறு எதுவும் இல்லையென்றால், எளிதில் எல்லோரையும் மறந்து வெளியே நகர்ந்துவிடுவார். அவரால் சிறிது நேரம் கூடச் சும்மா இருக்க முடியாது. நோயுற்றுப்படுத்துக் கிடக்கும்போது தவிர மற்ற நேரங்களில் எதையாவது செய்து கொண்டிருக்கும் சுறுசுறுப்புத் தன்மை உடையவர்.

நன்றி உணர்வு

நன்றி மறவாமல் அன்பு செலுத்தக் கூடியவர் ஷ, பிராங்க் ஆரீஸ் என்பவர் “சாட்டர்டே ரிவ்யூ” என்னும்