பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

47


இப்படியாக, பல புத்தகங்கள் மேஜைமீது திறந்தவாறு துசு படிந்தபடியே கிடக்கும். அவருடைய விருப்பம்

ஷா மது அருந்துவது இல்லை, புலால் உண்பதில்லை, சுருட்டு புகைப்பது இல்லை தோட்டத்தில் விளையும் காய்கறிகளையே பயன்படுத்தவார். இயற்கை உணவுகளையே பெரிதும் விரும்புவார்ர். இயற்கைச் சிகிச்சை முறைகளிலே மிகவும் ஆர்வம் கொண்டவர். ஒலி, உச்சரிப்பு முறை, ஆண்-பெண் கூட்டு வாக்குரிமை இவற்றை ஆதரிக்கிறவர்.

கலங்காதவர்

பிறவியிலேயே ஷா, துன்பத்தை இன்பமாக மாற்றிச் சிரித்திடும் இயல்புடையவராக விளங்கினார்; தம்முடைய வறுமையை வேடிக்கைான பேச்சுக்களுக்குப் பயன்படுத்திக் கொண்டு மகிழ்ந்து காலம் கழித்தவர். தம்முடைய துன்பத்துக்கோ, மற்றவர்களுடைய துன்பத்துக்கோ கலங்கி கண்ணீர்விடும் வழக்கம் இல்லாதவர்.

உலக வாழ்க்கையின் துன்ப நிகழ்ச்சி எதுவும் அவருடைய உள்ளத்தைக் கலங்கச் செய்யவில்லை. கடமை உணர்ச்சியையும், வேடிக்கைப் பேச்சையுமே தூண்டிவிட்டன.