பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



48

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



புகழைக் கண்டு மயங்காதவர்

தமக்கு உண்டான உலகப் புகழைக் கண்டு ஒருபோதும் மயங்காதவர் ஷா.

ஷாவின் தன்மைகள், செயல்களில் மட்டும் அல்லாமல் எண்ணங்களில், எழுத்துக்களில் மாறுபட்டு, பொது மக்களின் சிந்தனைக்கு எட்டாமல் காணப்பட்டார் அவர்.

ஷாவின் 90-வது பிறந்த நாள் காலையில், பத்திரிகையாளர் மற்றும் பலர் அவருக்கு வாழ்த்துக்கூற, அவர் வாழ்ந்த கிராமத்துக்கு வந்து காத்திருந்தனர்.

ஷா வழக்கம் போல் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டார்; செய்தித்தாள்களைப் படித்தார்.

வெளியே வந்து எல்லோரையும் புன்முறுவலோடு பார்த்தார்.

அப்படியே அங்கிருந்தவர்களை விலக்கிக்கொண்டு தம்முடைய ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏறி, ஒட்டுநரின் அருகில் அமர்ந்து எங்கோ மலைப்பக்கமாகச் சென்றுவிட்டார்.

அவருடைய வீட்டிலிருந்த எவருக்குமே ஷா தம்முடைய வயதைப் பற்றிச் சொல்லவில்லையாம். அந்தக் கிராமத்திலிருந்த பெண்களும், குழந்தைகளும் கை நிறைய மலர்களைக் கொண்டு வந்து ஷாவின் பிறந்த நாளை