பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



54

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்


நாட்டு மக்கள் தங்களுடைய வரிப்பணம் யுத்தத்துக்குச் செலவாகாமல் தடுக்க வேண்டும்” எனக் கூறியதோடு, ஆங்கில அதிகாரிகள் மீது சில குற்றங்களைச் சுமத்தினார் ஷா.

இத்தகைய புரட்சிக் கருத்துக்களைக் கூறி, ஷா சிக்கலில் மாட்டிக் கொண்டார். ஆங்கிலேயர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

தாக்குதலுக்கு ஆளானார்

பத்திரிகைகள் அவரைக் கடுமையாகத் தாக்கி எழுதின. அவருடைய நாடகங்களை மக்கள் புறக்கணித்து ஒதுக்க வேண்டும் என அறிவித்தன.

நண்பர்கள் பலர் ஷாவை வெறுத்து ஒதுக்கிவிட்டனர்.

எங்காவது ஷா அலுவலாகச் சென்றால், அங்கே இருந்தவர்கள் அவரைப் பார்த்ததும் மெதுவாக வெளியேறத் தொடங்கினார்கள்.

கடுமையான சொற்களால் வைது எழுதிய கடிதங்கள் நாள்தோறும் ஷாவைத் தேடிவந்து குவிந்தன.

“ஷாவுக்குத் தார் அடித்துத் தண்டிக்க வேண்டும்” என்று அச்சிட்டு அறிக்கை அனுப்பியவர் ஜேக்ஸ்குயர் என்பவர்.