பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

53


வேண்டாம் என்று தடுக்கிறேன். வியாபாரம் செய்யாமல் பங்கு மார்கெட்டில் தேர்ச்சி பெறலாம்.

“பெண்கள் கலையை நாடி மயங்கக்கூடாது. வியாபாரியையோ, பங்கு வாணிகம் செய்வோரையோ மணந்துகொள்ள வேண்டும்” என்று அவர்களுக்கு அறிவுரை கூறி, அதன்மூலம் இன்று உள்ள ஆடம்பரப் போக்கைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

ஓவியக் கலைஞர்

ஓவியக் கலையிலும் ஷா நிபுணர். தாம் எழுதிய நாடகக் காட்சிகள் பலவற்றிற்குத் தாமே ஓவியங்கள் தீட்டியுள்ளார்.

தம் தாயின் ஒவியத்தை முழுவடிவில் தாமே எழுதியுள்ளார்.

அவர் சிறந்த நாடக ஆசிரியர்; ஓவியக் கலைஞர்; சிறந்த நடிகர்.

யுத்த வெறி

முதல் உலக யுத்தம் நிகழ்ந்தபோது, “யுத்தம் வேண்டாம் என்ற கொள்கை வேரூன்றி, உலகத்தில் அமைதி நிலவ வேண்டுமானால், இராணுவத்திலுள்ள வீரர்கள் தங்கள் தலைவர்களைச் சுட்டு வீழ்த்திவிட்டுத் திரும்பி வரவேண்டும்.