பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



52

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



வறுமையின் பகைவர்

வறுமையைக் கண்டு ஆறுதல் பெறும் போக்கோ செல்வத்தைக் குறித்து கவலையற்றிருக்கும் தன்மையோ அவரிடம் இருந்ததில்லை.

வறுமையே பாவங்களில் எல்லாம் பொல்லாதது என்றும், வறியநிலையில் வாழ்வதே கொடிய பாவவாழ்க்கை என்றும் அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்வதே முதல் கடமையாகக் கொள்ளவேண்டும் என்றும் திரும்பத் திரும்ப விளக்கியுள்ளார்.

பணமே உலகத்தில் மிகச்சிறந்த பொருளாக உள்ளது; ஆகையால் தனிப்பட்ட வாழ்க்கையானாலும், அல்லது சமுதாய வாழ்க்கையானாலும் சீரான அடிப்படையிலே அமைந்தால்தான் நன்மை எதுவும் நிலைக்கும், வெற்றியும் பெறும் என்பது அவர் கொள்கை. அவருடைய நூல்களில் எல்லாம் அவர் வறுமையின் பொல்லாத பகைவராகவே விளங்கினார்.

இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளதில், இக்காலத்தில் பணமே உலக வாழ்க்கையின் அடிப்படையாக விளங்குவதை மறக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

“ஆணாயினும், பெண்ணாயினும் இசை முதலியவற்றைக் கற்றுக் கலைஞர் ஆக விரும்பக்கூடும். அது