பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



56

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்



மீண்டும் ஷாவின் புகழ்

ஆனால், ஷா மீண்டும் வெளியே வந்து கூட்டங்களில் பேசத் தொடங்கினார். முன்னிலும் பல மடங்காக, மக்கள் திரண்டுவந்து ஆரவாரம் செய்து ஷாவை வரவேற்றனர்.

யுத்த வெறி தணிந்த பிறகு, முன்னர் வெறுத்த லாகேயும், ஜேக்ஸ்குயரும் மீண்டும் ஷாவிடம் வந்து கைகுலுக்கி அளவளாவினார்கள்.

“யுத்த வெறியானது பிளேக், காலரா முதலான தொற்றுநோய்களைப் போலவே எனக்குத் தோன்றுகிறது. ஆகையால், மிகுந்த காய்ச்சலால் சன்னிபிடித்து தன்னை மறந்து துன்புறும் நோயாளியைக் கருதுவது போலவேதான் யுத்த வெறிபிடித்த மக்களைக் கருதவேண்டும். அந்த நிலையில் அவர்களைக் குறைகூறிப் பயன் இல்லை” என்று கூறினார் ஷா.

பெண்களிடம் மதிப்பு

பெண்களிடத்தில் ஷாவுக்கு மதிப்பு உண்டு. பெண்களின் முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.

அவருடைய நாடகங்கள் பலவற்றில் பெண்களை மிக உயர்வாகக் குறிப்பிடுகிறார்.