பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

57



பெண்ணே ஆணைப்படைத்து வளர்ப்பவள்; பெண்ணே ஆணை ஆட்கொண்டு வாழ்விப்பவர் என்று பல இடங்களில் புலப்படுத்துகிறார்.

“இசைவாணர் வீணையைப் போற்றுவதுபோல், இராணுவ வீரன் துப்பாக்கியைப் போற்றுவது போல் பெண் தன் கணவனைப் போற்றுகிறாள்” என ஒரு நாடகத்தின் கதாபாத்திரத்தின் வாயிலாகக் கூறுகிறார்.

அமைதியான இல்வாழ்க்கை

நாற்பது வயதுக்குமேல் ஷா திருமணம் செய்து கொண்டவர். மக்கட்பேறு இல்லாதவர். மனைவியோடு அமைதியோடும், அன்போடும் வாழ்ந்தார். ஷா மிகவும் சிக்கனமானவர். ஆடம்பரத்தை விரும்பாதவர். மனைவி செல்வச் செழிப்பில் வளர்ந்தவள் என்ற போதிலும் ஷாவின் விருப்பம்போல், எளிய வாழ்க்கையை மேற்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

தாயும் மகனும்

தன் தந்தையிடம் ஷாவுக்கு வெறுப்பும், கசப்பும் இருந்தது. இருவரும் பிரிந்தே வாழ முற்பட்டனர். ஆனால் தாயிடம் எவ்வித கசப்பும் இல்லாமல் அவருடன் இருந்து வந்தார் ஷா.