பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்




மகன் உலகம் அறிந்தவராகத் திகழும் காலம்வரையிலும் ஷாவின் தாய் உயிரோடு இருந்தார்.

இறுதிப் பத்தாண்டுகள் வரை, தாயை நல்லமுறையில் காப்பாற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் ஷா.

ஆனால், ஷாவின் தொண்டுகளில் அந்தத் தாய் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை.

இசைக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த தாய், ஷாவின் இசை ஆராய்ச்சிகளைப் படிக்கவில்லை; ஷா எழுதிய நாடகங்களைக் கூட அவர் பார்த்ததில்லை. ஆனால் சிலவற்றைப் படித்திருக்கக்கூடும். இது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கவில்லையா?

இறந்த உடலைப் புதைப்பதை ஷா விரும்புவதில்லை. அதனால், தாயின் உடலுக்கு எரியூட்டச் செய்தார். எரியூட்டுச் சடங்கின்போது அவர் ஒதுங்கியே இருந்தார். ஷாவின் முகத்தில் துயரம் சிறிதும் இல்லை. ஆறுதலான மகிழ்ச்சியே படர்ந்திருந்தது. அவருடைய மனநிலையைக் கண்ட அருகில் இருந்த நண்பர் வியப்படைந்தார்.

ஊர் சுற்ற விரும்பாதவர்

எப்போதும் ஷா தாமாகவே மகிழ்ச்சிக்கான வழிகளைத் தேடித் திரிந்ததே இல்லை. அவர் இயற்கையாகவே