பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

59


வெளியிடங்களுக்குச் சென்று சுற்றி அலைவதில் விருப்பம் இல்லாதவர்.

ஆனால், அவர் மனைவியோ அதற்கு எதிரிடை யானவர். அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று, பொழுது போக்குவதையே விரும்புவார்.

ஊரில் இருந்துகொண்டே, தினசரிக் கடமைகளைத் திருத்தமாகச் செய்து முடிப்பதிலே ஷா மகிழ்ச்சி அடைந்தார்.

“என்னளவில் விட்டு விட்டிருந்தால், பிறந்த வீட்டை விட்டு வெளியே போகலாம், அதிலே இறந்த போயிருப்பேன்” என்கிறார்.

“சில மரங்கள் மனிதனைக் காட்டிலும் உயரமாக வளர்ந்து, நீண்டகாலம் இருப்பதற்கான காரணம் என்ன? ஒர் இடத்தைவிட்டு மற்றோர் இடத்தை நாடிச் சென்று சக்தியை வீணடிக்காததே காரணம்” என்று கூறுகிறார் ஷா.

“அவர் ஒரு பழைய டிராம் வண்டி, அது போன பாதையிலேயே திரும்பத் திரும்பப் போய்க்கொண்டிருக்கும்” என்று ஷாவைப் பற்றி திருமதி பில்லிமோர் கூறுகிறார்.


ஷாவின் உலகப் பயணம்

ஷாவின் நெருங்கிய நண்பர் அஸ்டார் தம்பதிகள் ரஷ்யாவுக்குப் புறப்பட்டபோது, ஷாவை வற்புறுத்தி