பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



60

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்


அழைத்தார்கள். எதிர்பாராத வகையில் ஷா அவர்களுடன் புறப்பட்டார். அது பலருக்கு வியப்பை அளித்தது.

ஷா எழுபத்தைந்து வயதைக் கடந்தபிறகே, உலகப் பயணத்தை மேற்கொண்டார். அதுவும் அவருடைய மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்கியே பயணத்தை ஏற்றார்.

சென்ற இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தபிறகு, “எங்கும் புதுமை இல்லை, ஒர் இடம் மற்றோர் இடத்தைப் போலவேதான் இருக்கிறது” என்றார் ஷா.

ஷாவும் அவருடைய மனைவியும் நெருங்கிய நண்பர்களோடு பம்பாயில் வந்து இறங்கினார்கள். ஒரு வாரம் இந்தியாவில் தங்கி தாஜ்மகால் முதலியவற்றைச் சுற்றிப் பார்த்தனர்.

ஆனால், ஷா மட்டும் பம்பாய் துறைமுகத்திலே தங்கிவிட்டார். அங்கே வந்தவர்களுடன் பேசி, பலவற்றை அறிந்தார்.

“பம்பாயில் இருந்தபோது, என்னுடைய பெயர் ஜைனமதம் என்ற பெயருடன் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்” என்றார் ஷா.

சைனாவின் சரித்திரப் புகழ்பெற்ற நீண்ட நெடுஞ்சுவரைப்பற்றி ஷாவைக் கேட்டபோது, “விமானத்தில்