பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்

61


பறந்தபோது அதைக் கண்டேன். மற்ற சுவர்களைப்போலவே அதுவும் ஒரு சுவர். அவ்வளவுதான்!” என்றார்.

ஷாவின் நாடகங்களுக்குப் புகழும், பொருளும் அளித்துப் போற்றிய அமெரிக்காவுக்கு 1933ல் ஒரே ஒரு முறை விமானத்தில் போய் வந்தார்.

ஓய்வை அறியாதவர்

ஓய்வு என்பதையே அறியாதவர் ஷா, எப்பொழுதும் எதையாவது செய்து கொண்டிருப்பதே அவருடைய பொழுதுபோக்காகும்.

“என் வாழ்க்கையில் நான் ஒரு நாளும் விடுமுறை பெற்றதே இல்லை” என்று கூறுகிறார் ஷா.

உழைப்பதையே எந்த நாளிலும் இன்பமாகக் கொண்டவர்.

புகைப்படம் எடுத்தல், அதைக் கழுவுதல், கார் ஒட்டுதல், நீந்துதல் இவற்றில் ஷாவுக்கு விருப்பம் அதிகம்.

இசையில் அடிக்கடி ஆழ்ந்து விடுவார். இலக்கியத்தைக் காட்டிலும், இசையிலே அவருக்குக் கவர்ச்சி அதிகம். பாடும் பழக்கமும் அவருக்கு உண்டு.