பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் அதை அறிந்த ஷா, “பிரான்ஸ் ஜோஸப் ஆஸ்டிரியா ஹங்கேரியாவின் பேரரசராயிருக்கலாம். ஆனால், நாடக மேடையைப் பொறுத்தவரை, ஷா ஐரோப்பாவுக்கே பேரரசர். ஐரோப்பிய மேடை முழுவதும் அவர் வாக்கே முடிவானதாகும்” என ஆணித்தரமாக தம் கொள்கையை வலியுறுத்தினார். அரசு பணிந்துவிட்டது. மாறுதல் எதுவும் இல்லாமல் நாடகங்கள் நடைபெற்றன. இயற்கையின் உறுப்பு 'வாளைப் பிடிக்க நான் பயன்படுத்தும உறுப்பு என் கைவிரல், தன்னை உணர்ந்து கொள்ள இயற்கை பயன்படுத்தும் அதன் உறுப்பு என் மூளை.” யார் விருப்பப்படி நடக்கிறோம் “உலகின் விருப்பப்படி நாம் நடக்கிறோம், நம் விருப்பப்படியல்ல.” அறிவும் மனிதனும் “நான் வீரனையும், வாளையும் பாடமாட்டேன்; அறிவுடைய மனிதனையும் அறிவையும் பாடுவேன்.”