பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 87 தர்க்க ரீதியாகச் சிந்தனை செய்யக் கற்றுக்கொண்டால் ஒழிய, அவர்கள் எதிர்காலத்திலும், எப்போதும் பயந்து கொண்டுதான் இருப்பார்கள் மக்களுக்குத் தெளிவான சிந்தனை சக்தியை ஊட்டும் முயற்சியில் நான் அநேக ஆண்டுகளைக் கழித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும் பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது, கல்வித் தரம் இருக்கிறதே, அதிலும் அரசியல்வாதிகளின் கல்வித் தரம் படுமோசமாக இருக்கிறது. கேவலம் எழுதப்படிக்கத் தெரியாத இந்த ஆசாமிகளுக்கு தலைமை தாங்கும் யோக்கியதை எப்படிக் கிடைத்துவிடும்?” என ஒரு பேட்டியில் ஷா கூறினார். பேரரசர் ஷா ஷா தம் கொள்கையில் உறுதி உள்ளவர் என்பதற்கு 1902-ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று எடுத்துக்காட்டாகும். ஆஸ்டிரியத் தலைநகரான வியன்னாவில், ஷாவின் மூன்று நாடகங்கள் நடைபெற இருந்தது. அந்த நாடகங்களில், சில மாற்றங்கள் செய்ய ஒப்புக்கொண்டாலன்றி, அவற்றிற்கு அனுமதிதர இயலாது என அரசியலார் கூறினர்.