பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் வம்பு வளர்த்ததைக் காட்டிலும் வேறு ஒன்றும் செய்யாதவர். ஆகையால், குழுவில் நீங்கள் இல்லாமல் இருப்பதே நல்லது”. இப்படி ஒரு சங்கமா? பிராணிகள் நலச் சங்கத்தில், “விலங்குகளைத் துன்புறுத்துதல் கூடாது என்ற கொள்கைப்பற்றிப்பேசுமாறு ஷாவை அழைத்தார்கள். ஷா கூட்டத்துக்கு வந்து அமர்ந்து தன்னைச் சுற்றி இருந்த செல்வந்தர்களையும், செல்வாக்குள்ளவர்களையும் பார்த்தார். பிறகு பேச எழுந்தார்: “பல விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதால் கிடைக்கக்கூடிய தோலையும், உரோமத்தையும் பயன்படுத்தி தங்களை அலங்கரித்துக்கொண்டு இங்கே வந்து அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் நின்று, நான் பேச நேர்ந்தமைக்காக மிகவும் வருந்துகிறேன் என அவர்களுடைய தவறு விளங்குமாறு இடித்துரைத்தார் ஷா. மக்களின் பயம் “கம்யூனிஸம் என்னவோ பரவத்தான் செய்யும், மக்களும் அதைக்கண்டு பயப்படத்தான் செய்கிறார்கள். எப்போதும் அவர்கள் பயந்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.