பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 85 "இவருடைய இசையைக் கேட்டபோது, ரூஸ்கியின் நினைவுதான் எனக்கு உண்டாகிறது”என்றார் ஷா, நிகழ்ச்சி அமைப்பாளர் திடுக்கிட்டு, ரூஸ்கி வயலின் வித்துவான் அல்லவே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று வியப்போடு கேட்டார். உடனே ஷா, “இவர்மட்டும் என்னவாம்?” என்று பதில் அளித்தார். பொறுப்பை உணர்த்துகிறார் நாடக ஆசிரியர் சங்கத்தின் குழு ஒன்றில் ஷா உறுப்பினராக இருந்தார். அப்பொழுது மற்றொரு உறுப்பினருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார். “ஒரு குழுவில் இருந்து கொண்டு ஏதாவது நன்மை செய்யவேண்டுமானால், அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது, குழுவின் ஒவ்வொரு கூட்டத்தையும் புறக்கணிக்காமல் கலந்துகொண்டு, வாழ்க்கையின் நெருக்கடியான நிலைபோல் உணர்ந்து கடமையைச் செய்ய வேண்டும். நீங்களோ உணர்ச்சியும், ஆத்திரமும் மிகுந்தவர்; காரண காரியத்தைப் பற்றி கவலைப்படாதவர்; முழு நேரமும்