பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் மட்டரகமானப் பேச்சு “இந்த நாட்டில், அரசியல் சொற்பொழிவுகளின் தரம் சர்வமட்டமாக இருக்கிறது-ஷாவின் கருத்து. அவர் செய்த உதவி “சிட்னிவெப் என்னும் சமதர்ம எழுத்தாளரின் உதவியால்தான் தம் அறிவு விருத்தியானது; இல்லாவிடில் கார்லைல், ரஸ்கின் ஆகியோரைப்போல் வெறும் இலக்கியச் சொல் வீச்சுக்களிலேயே தாம் ஈடுபட்டிருக்கக்கூடும்” என்று ஷா கூறுகிறார். நல்ல நண்பர் “ இந்த உலகத்திலேயே முதன் முதலில் சோவியத் அரசாங்கம் என்னுடைய நாட்டில்தான் தோன்றியது. அப்போது ஷா என் நாட்டின் நண்பர் ஆனார். ஷாவின் நேர்மையை என் நாட்டு மக்கள் போற்றினார்கள். அவரை நண்பராக அவர்கள் கருதினார்கள். அவருடைய பெருமைகளை நன்கு மதித்தார்கள். அவருடைய சின்னஞ் சிறு குறைபாடுகளை அவர்கள், பொருட்படுத்தவில்லை.