பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 91 இந்த எழுத்தாளர் என்னுடைய நாட்டினிடத்திலும், என் நாட்டு மக்களிடத்திலும், கொண்டிருந்த அபிப்பிராயம் எந்த ஒரு மாறுதலும் அடையாமல் அப்படியே இருந்து வருகிறது” (இவ்வாறு எ. அல்மஸோவ் என்னும் ருஷ்ய எழுத்தாளர் 1946 ஜூலை, சோவியத் லிட்டரேச்சர்” என்னும் இதழில் எழுதியிருந்தார். சக்தி வாய்ந்தவர் ஷாவின் நண்பர்கள் சிலர் பார்லிமெண்ட் தேர்தலுக்கு அவரை நிற்கச் சொன்னார்கள். “பார்லிமெண்டுக்குள் இருக்கும் நூறு உறுப்பினர்களை விட, வெளியேயிருக்கும் ஒரு ஷா அதிக சக்தி வாய்ந்தவன்” என்று கூறி தேர்தலுக்கு நிற்க மறுத்துவிட்டார் அவர். தன் பலத்தையும், செல்வாக்கையும் நன்கு உணர்ந்திருக்கிறார் ஷா. அவகாசமே இல்லாதவர் ஷாவிடம், "உங்கள் நாடகங்களில், நீங்கள் மிகவும் விரும்புவது எது?” என்று ஒருவர் கேட்டார். “என்னுடைய நாடகங்கள் பத்தயக் குதிரைகள் அல்ல. ஒருமுறை அவற்றை எழுதி முடித்துவிட்ட பிறகு, மீண்டும்