பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் அவற்றைப்பற்றி நினைப்பதற்கே எனக்கு அவகாசம் இருப்பதில்லை” என்று பதில் அளித்தார் ஷா. வேண்டாத கேள்விகள் ஷாவைப் பார்த்து, பத்திரிகை நிருபர் ஒருவர், 'உங்களைப் பிரிட்டனுக்கு சர்வாதிகாரியாக்கி விட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று கேட்டார். அதற்கு ஷா, “அநேகமாக நீரோவைப்போல வெறியனாகி விட்டாலும் ஆகிவிடுவேன். ஏன் இப்படி சில்லரைத் தனமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்?’ என்று பதில் அளித்தார். தகுதி பெறாத மக்கள் பொழுது போக்காக நடைபெறும் விளையாட்டுக்களை ஷா எப்பொழுதும் வெறுத்து வந்தார். “நான் நன்கு சிந்தித்தப் பிறகு இந்த முடிவுக்கு வந்தேன். வெட்ட வெளியான இடத்தில், ஒரு பந்தைக் துரத்திக்கொண்டு திரிவதைத் தவிர, வேறு எதற்கும் இக்காலத்து மக்கள் தகுதி அடையவில்லை என்பதை அறிந்தேன்’ என்று கூறுகிறார் ஷா.