பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 93 இறுதி ஆசை இறந்த உடலை எரிக்க வேண்டும் என்பது ஷாவினுடைய கொள்கை. தம் தாயும் சகோதரியும் இறந்தபோது அவர்களின் உடலை எரிக்கச் செய்தார். 1943ல் தன் மனைவி இறந்த போதும் அவ்வாறே எரிக்கச் செய்தார். தாம் இறந்த பிறகு, தம் உடலை எரிப்பதற்கான கட்டணத்தை ஷா முன்னதாகவே கட்டியிருந்தார். அவருடைய விருப்பத்தின்படியே, உடல் எரிக்கப்பட்டது. சாம்பலை ஒரு வெண்கலச் சட்டியில் இட்டார்கள். அந்தச் சட்டியில் ஷாவின் மனைவியின் சாம்பல் 1943 முதல் வைக்கப்பட்டிருந்தது. ஷாவின் விருப்பப்படி, ஷா வாழ்ந்த வீட்டின் தோட்டத்தில், கணவன்-மனைவி இருவருடைய சாம்பல் தூவப்பட்டது. வறுமையில் பிறந்து வளர்ந்த ஷா, செல்வந்தராக வாழ்ந்தார். இறுதிக் காலத்தில் அவர் சேர்த்து வைத்திருந்த சொத்து பத்துலட்சம் பவுன்கள்! அவற்றை என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றியும் விருப்ப ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஷா.