பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை: ஆங்கில மொழியின் எழுத்துச் சீர்திருத்தம், அயர்லாந்தின் கலை வளர்ச்சி, பிரிட்டிஷ் பொருட்காட்சி, நூல்நிலையம், நாடகக் கலைக்கழகம் முதலியவற்றுக்கு நிதி ஒதுக்கி வைத்துள்ளார். ஷாவின் விருப்ப ஆவணத்தின் குறிப்பிடத்தக்க பகுதி: "நான் இறந்த பிறகு என் உடல் எரிக்கப்படவேண்டும். அந்த சாம்பல், என் மனைவியின் சாம்பலோடு கலக்கப்படவேண்டும். முப்பத்தைந்து ஆண்டுகள் நானும் என் மனைவியும் வாழ்ந்து வந்த அயாட் லாரன்ஸ் கிராமத்தில் உள்ள என் வீட்டுத் தோட்டத்தில் சாம்பலைப் புதைக்க வேண்டும் அல்லது தூவப்பட வேண்டும். அறங்காவலர்கள் வேறு முறை சிறந்தது என்று கருதினால், அல்லாது இவ்வாறே செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய சமயக் கொள்கைகளையும், விஞ்ஞானக் கருத்துக்களையும் பற்றி இன்னும் தெளிவாக இப்பொழுது விளக்க இயலாதபடியால், பொதுவான நினைவுச் சின்னமோ, கலைச்சின்னமோ, புகழ் முத்திரையோ, சமயக் கருத்துரையோ, சமயச் சடங்கோ என் நினைவுக்காகச் செய்து, அதனால் கிறிஸ்துவ கோயில் அல்லது அந்த