பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் 95 அமைப்பின் கொள்கைகளுக்கு நான் உடன்பட்டிருந்தேன் என்று கருதுமாறு செய்யக்கூடாது. சிலுவையோ, வதைத்துத் துன்புறுத்தும் வேறு கருவியோ, இரத்தம் சிந்தும் தியாகத்தின் வேறு அறிகுறியோ எழுப்புதலும் கூடாது". ஷாவின் இறுதி நாள் ஷா உணர்விழந்து கிடந்த கடைசி நாளில், உள்ளூர் பாதிரியார் வந்து சமயச் சார்பாகச் செய்யவேண்டிய சடங்கைச் செய்து முடித்தார். "ஷா நாத்திகர் அல்லர். அவர் கடவுளை நம்பியவர். அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர் எழுதிய "செயின்ட் ஜோன்” என்னும் நாடகத்தைப் படித்தால் தெரியும்” என்று சொல்லிவிட்டு சென்றார் உள்ளூர் பாதிரியார். ஒய்வு இல்லாமல் 50 ஆண்டுகள் உழைத்து வந்த ஷாவின் உயிர் 1950 ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி விடியற்காலை மூன்று மணி முதல் அமைதியுறத் தொடங்கியது. அது முதல் ஷா உணர்வு இழந்து கிடந்தார். அந்த நிலையிலேயே மறுநாள் விடியற்காலை 4-59க்கு உயிர் நீத்தார்.