பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கூறினேன். இந்த மாறுபட்ட ஜோடி சில உயிர்களிலே அண்டத்தில் இருப்பதுண்டு.

ஈயின் கால்கள் ஜோடியாக வளர ஒரு ஜீன் உதவுகிறது; ஒரு ஜீன் அதன் சிறகுகளின் வடிவத்தை அமைக்கிறது. சில ஜீன்கள் கண்ணின் வடிவத்தையும்

ஆண் ஈ,பெண் ஈ,

படம் 2.

நிறத்தையும் நிர்ணயம் செய்கின்றன. இன்னும் சில தேகத்தின் நிறத்தைத் திட்டம் செய்கின்றன.

கண், தலைமயிர் முதலிய வெவ்வேறு உறுப்புக்களுக்கு ஜீன்கள் காரணமாக இருப்பது போல நிறத்துக்கும் அவையே காரணம். அந்தி மல்லிகைச் செடி-