பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

6. ஜீன்கள்

ஜீன்களே பலவகையான தன்மைகளுக்கும், அங்க அமைப்புக்கும் காரணமாக இருக்கின்றன. அவற்றின் இயல்பைப்பற்றி முற்றும் வரையறுத்துக் கூறுவது மிகக் கடினமான காரியம் என்றாலும், அவற்றால் ஏற்படுகிற பல தன்மைகளைப்பற்றி ஆராய்ந்து கண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய உதவியாக இருந்தது ஒருவகை ஈயாகும் (Fruit Fly).

அடுத்த பக்கத்தில் படத்திலே காணப்படுபவைதான் அந்த ஈக்கள். இடது பக்கத்தில் இருப்பது ஆண் ஈ; வலது பக்கத்தில் இருப்பது பெண் ஈ. அவற்றினுடைய உயிரணுக்களிலுள்ள நிறக்கோல்கள் கீழே காண்பிக்கப்பட்டுள்ளன. ஈயின் விந்தணுவிலும் அண்டத்திலும் நான்கு நான்கு ஜோடி நிறக்கோல்கள் இருக்கின்றன. பெண் ஈயின் நிறக்கோல்களில் ஒவ்வொரு ஜோடியும் ஒரே மாதிரி வடிவங் கொண்டிருப்பதையும், ஆண் ஈயின் நிறக்கோல்களில் ஒரு ஜோடி மட்டும் மாறுபட்டிருப்பதையும் படத்தில் காணலாம். ஒவ்வொரு வருக்கத்தைச் சேர்ந்த உயிர்ப் பொருள்களின் உயிரணுவிலும் ஒரே எண்ணிக்கையுள்ள நிறக்கோல்கள் உண்டென்றும், அவற்றை ஒரேமாதிரி உருவமுடைய ஜோடிகளாகப் பிரித்து வைக்க முடியுமென்றும், சாதாரணமாக விந்தணுவிலுள்ள ஒரு ஜோடி மட்டும் உருவத்தில் மாறுபட்டிருக்கும் என்றும் முன்பே