பக்கம்:பேசாத நாள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை திருநாவுக்கரசர் தேவாங்களின் கடைசித் திருமுறையாகிய ஆளுங் திருமுறையிலிருந்து எடுத்த பதின்மூன்று பாசுரங் களுக்குரிய விளக்கக் கட்டுரைகளே இந்தப் புத்தகத்திற் காணலாம். ஆருக் கிருமுறையில் 99 பதிகங்களும் 981 பாடல்களும் இருக் கின்றன. இந்தப் பதிகங்கள் யாவும் கிருத்தாண்டகங்கள். . கிருத்தாண்டகம் என்பது யாப்பிற்ை பெற்ற rெயர். தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுளுக்குரிய பெயர். அது குறுந்தாண்டகம் என்றும், நெடுந்தாண்டகம் என்றும் இருவகைப் படும். அறுசீர் அடிகள் கான்கு அளவொத்து முடிவது குறுக் தாண்டகம் என்றும், எண் சிாடிகள் நான்கு அளவொத்து அமைவது நெடுந்தாண்டகம் என்றும் பெயர் பெறும்.

'மூவிரண் டேனும் இரு நான் கேனும்

சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர் கடவுளர்ட் புகழ்வன தாண்டகம்; அவற்றுள் அறுசீர் குறியது; நெடியது எண் சீராம்’ 'அறு சீர் எண்சீர் அடி நான் கொத் தங்கு இறுவது காண்டகம்; இருமுச் சீரடி குறியது; நெடியது இரு நாற் சீரே' -. என்று இதன் இலக்கணத்தைப் பன்னிரு பட்டியல் என்னும் இலக் கண நூல் கூறுகிறது.

'இருபத்தேழ் எழுத்து முதலாக உயர்ந்த எருத்தடியினவாய் எழுத்தும் குரு லகுவும் ஒத்து வருவன அளவியற்றண்டகம், எழுத்து ஒவ்வாதும், எழுத்தலகு ஒவ்வாகம் வருவன அளவழித் தாண்டகம்' என்று யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் இலக் கனம் எழுதுவார் (கு. 95, உரை.)

முன்னுள்ள இலக்கணத்தின்படி இத் திருமுறையில் உள்ள பாடல்கள் நெடுந்தாண் டகத்தின் பாற் படும். பின்னுள்ள இலக் கணத்தின்படி அவை அளவியற்ருண்டக மாகும்.

யர்ப்பருங்கலக்காரிகைப்படி இவை எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தத்துள் அடங்கும். அாையடிக்குக் காய்ச்சீர் இரண்டும் மாச்சீர் இரண்டும் வந்த விருத்தங்கள் இவை. சில பாடல்கள் இந்த வரையறையினின்று மாறுபட்டும் இருக்கும். எண்சீர் விருத்தம் என்ற சட்டத்துக்குள் அடைக்க வேண்டு மென்று கருதித் திருத்தாண்டகப் பாடல்களைத் திருத்துவது முறையன்று. ஆன்றேர்கள் வாக்கை அப்படி அப்படியே வைத்துப் பாதுகாத்து, இலக்கணக்கில் அதற்கு அமைதி உண்டா என்று தேடிப் பார்த்துப் பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லே யெனின் அதற்கு அதுவே இலக்கணமாகக் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/5&oldid=610063" இலிருந்து மீள்விக்கப்பட்டது