பக்கம்:பேசாத நாள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்' என்பது எவ் வகை இலக்கணங்களுக்கும் ஏற்புடைய விதி. பண்டை இலக் கணங்களில் ஆன்ருேர் இலக்கியங்களைக் கண்டு விதிகளை வகுத் தார்கள் புலவர்கள். அந்த விதிகளில் அடங்காதவற்றுக்குப் புற கடை வகுத்தார்கள். அவை போதா என்று ஆரிடம், ஆரிடப் போலி என்பன போலச் சில போக்குகளைக் காட்டியிருக்கிருர் கள். இவ்வளவுக்கும் காரணம் முந்தையோர் இலக்கியங்களே காம் இயற்றும் இலக்கணத்துக்குப் புறம்பானவை யென்று தள்ளிவிடக் கூடாது என்பதுதான்.

தாண்டகம் பாடுவதில் அப்பர் சுவாமிகள் மிகச் சிறந்தவர். அதல்ை அவருக்குத் தாண்டக வேந்தர், காண்டகச் சதுரர் என்ற திருகாமங்கள் வழங்கலாயின. திவ்யப் பிரபந்தத்தில் கிருமங்கை மன்னன் பாடியுள்ள நெடுங்தாண்டகப் பாக்களைத் திரு நெடுங் தாண்டகத்தில் காணலாம். கிருநாவுக்கரசருடைய தாண்டகப் பாக்கள் மனத்தை உருக்குவன. அவர் பாடிய பலவகைப் பாடல்களில் காண்டகம் இறைவனுடைய பெருமையை விரி வாகச் சொல்ல இடங்தருவது. அதல்ை மன முருக்கும் வகையில் அடுக்கடுக்காகத் தொடுத்துச் சொல்லுகிருர் வாகீசர்.

ஆருந் திருமுறையில் 64 தலங்களைப் பற்றிய பாடல்கள் வரு கி ன் ற ன. திருவாரூருக்குப் பதினுெரு பதிகங்கள் இ ரு க் கின்றன. திருவதிகைக்கு ஐந்தும், கிருவிழிமிழலைக்கு நான்கும், திருக்கயிலாயத்துக்கு மூன்றும் உள்ளன. இரண்டு பதிகங்களைப் பெற்ற தலங்கள் எட்டு. கேத்திரக்கோவை, அடைவுகிருத்தாண் டகம் என்ற இரண்டும் பல தலங்களைச் சொல்லுகின்றன. எந்தத் தலத்தைப்பற்றியும் இன்றிப் பொது வகையில் அமைந்த தாண் டகங்கள் ஆறு இத் திருமுறையில் அமைந்துள்ளன.

இந்தப் புத்தகத்தில் விளக்கம் பெறும் பதின்மூன்று பாடல் களில் பகிைெரு தலங்கள் வருகின்றன. ஆளுரைப்பற்றிய மூன்று பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

பாடல்களின் பொருளே வெவ்வேறு வகையில் வெளிப் படுத்த எண்ணி, வினவிடையாகவும் காட்சி வருணனையாகயும் வேறு வகையாகவும் இந்தக் கட்டுரைகளே எழுதினேன். அன் :: வரிசையை ஆதரித்து எழுதும் கடிதங்களும், ஊக்க மளித்துக் கூறும் வார்த்தைகளும் றைவன். வாளை கினைக்கச் செய்கின்றன. 苗 అ இறை திருவரு

மயிலாப்பூர் }

2eーマー54 கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/6&oldid=610064" இலிருந்து மீள்விக்கப்பட்டது