பக்கம்:பேசாத நாள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசாத நாள்

- மனிதராகப் பிறந்தவர்கள் பேச்சு என்னும் பெரு வரத்தைப் பெற்றிருக்கிருர்கள். பெற்ற அதைத் தக்க வண்ணம் பயன்படுத்த வேண்டும். அறிவுடையவன் என்று பெருமை கொள்ளும் மனிதன் தனக்கு அகப்பட்ட எல்லாவற்றையும் கன்கு பயன்படுத்திக் கொள்வதுதான் முறை. வேறு பிராணிகளுக்குக் கிடைக்காத வாக்கை கன் முறையிலே பயன்படுத்தினல் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். காலுடையவன் கடந்தால்தான் காலுடையவன் என்பதற்கு உரியவன் ஆவான். அப்படியே, வாயுடையவன் பேசினால்தான் அவன் வாயுடைய மனிதன் என்று சொல்வதற்குத் தகுதி உடையவன் ஆவான். வாயுடையவன் மனிதன்; மற்றப் பிராணிகள் எல்லாவற்றையும் வாய் இல்லாத பிராணிகள் என்று சொல்கிருேம்.

பேசுகிறவன்தான் மனிதன், கல்லதைப் பேசுவதுதான் பேச்சு; ஆகையால் கல்லதைப் பேசுபவன்தான் மனிதன் என்று சொல்லவேண்டும்.

  • சொல்லுக சொல்லிற் பயனுடைய' என்று குறள் கூறுகிறது.

நல்லதைப் பேசுகிற காளே, மனிதப் பிறவியை கன்கு பயன்படுத்திய நாள் என்று சொல்லலாம். அப்படிப் பேசாத காளைப் பயன் பெருத நாள் என்னலாம். அதையே இன்னும் அழுத்தமாகச் சொன்னல் பிறவா நாள் என்று சொல்லிவிடலாம். அப்பர் சுவாமிகள் அப்படித்தான் சொல்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/7&oldid=610065" இலிருந்து மீள்விக்கப்பட்டது