பக்கம்:பேசாத நாள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பேசாத காள்

பேசாத நாள்ளல்லாம் பிறவா நாளே என்கிருர்,

முன்னுல் ஒன்றும் சொல்லாமல், பேசாத நாள்

எல்லாம் பிறவா நாளே என்று சொல்லி யிருந்தால், எப் போதும் வழி வழவென்று பயனில்லாத வார்த்தைகளைப் பேசுகிறவர்களை யெல்லாம் உயர்ந்த மனிதர்களாகக் கொள்ள வேண்டி வரும். திருகாவுக்கரசர் அப்படிச் சொல்லுவாரா? இன்னவாறு பேசவேண்டும் என்று தெரிந்து கொண்டவர் அவர். t .

எதை எதையோ பற்றிப் பேசுகிருேமே, அந்தப் பேச்சில்ை பெரிய பயன் ஒன்றும் இல்லை. ஆல்ை இறை வசீனப் பற்றிப் பேசும் பேச்சு கல்ல பயனேத் தரும். விருப்பு வெறுப்பு இல்லாத இன்ப கிலேயைத் தரும், அதைச் சொல்ல வருகிருர்,

சிதம்பரமாகிய பெரும்பற்றப் புலியூருக்குப் போய் கடராசப் பெருமானத் தரிசித்து இன்புற்ருர் காவுக்கரசர். அப்போது அவருக்கு இந்த எண்ணம் தோன்றியது. ‘என்ன என்னவோ பேசிப் பொழுது போக்குகிருர்களே மனிதர்கள். பேசப் பெரிதும் இனிய பெருமாளுகிய இறை வனுடைய புகழைப் பற்றிப் பேசத் தெரியவில்லையே! பேசப் பேசக் குறைவு படாமல் எல்ல்ே யின்றிப் பெருகும் புகழ் அல்லவா அவன் புகழ்? அவனப் பேசாத பேச்சும் ஒரு பேச்சா? அவனைப் பேசாத நாளும் ஒரு நாளா? என்று. எண்ணினர். இறைவனுடைய இயல்புகளைச் சற்றே சிந்திக்கப் புகுந்தார். அவன் அறிவதற்கரிய நுண்ணிய பொருளாக இருப்பதை எண்ணிப் பார்த்தார்; அவ்வாறு இருந்தாலும் அன்புடையாருக்கு இன்பம் தரும் அநுபவப் பொருளாக இருப்பது கனவுக்கு வந்தது. பலவகைத் வர்களாக இருக்கும் இயல்பையும் நினைவுக்குக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/8&oldid=610066" இலிருந்து மீள்விக்கப்பட்டது