பக்கம்:பேசாத நாள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசாத காள் 3

வந்தார். உலகில் உள்ள ஐம் பெரும் பூதங்களாக இருப்ப தைச் சிந்தனை செய்தார். இன்னும் எண்ண எண்ண் விரியும் இயல்புகளை யெல்லாம் அவர் உள்ளம் முகந்து உணர்ந்து மகிழ்ந்தது; அவற்றைப் பாடத் தொடங்கினர்.

- ★ * . - இறைவன் அரிய பொருள் நுட்பமான பொருள். இந்த இயல்பை ஐந்து வகையாகச் சொன்னர். அவன் புலன்களால் அறிவதற்கு அரியவன்; அந்தணருடைய சிங்தையிலே கருத்துப் பொருளாக நிற்பவன்; பொருள் அறிவதற்கரிய வேதத்தினுள்ளே இரகசியப் பொருளாக இருப்பவன்; நுட்பப் பொருளாகிய அணுவாக இருப் பவன்; யாருக்கும் தெரியாத இயல்பை உடையவன். இவ்வாறு பாடினர். - -

அரியானே அந்தணர்தம் சிந்தை யானே அருமறையின் அகத்தானே அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனே.

- 女 இறைவன் அரிய பொருளாக இருந்தால் நமக்குப் பயன் என்ன? அவன் அரிய பொருளே யன்றி இல்லாத பொருள் அன்று. தன்னைத் தொழுது அன்பு செய்வார் நுக ரும் இன்பப் பொருளாகவும் அவன் இருக்கிருன். எல்லோ ருக்கும் எளிதாகக் கிடைக்கும் பொருள் ஒருவனுக்குக் கிடைத்ததானல் அது பெரிது அன்று. மிக மிக அரிய பொருள் சிலருக்குக் கிடைக்கும் பொருளாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதைப் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டாகும். யார்க்கும் தெரியாத தத்துவனகிய அவன் அன்புடையாருக்குத் தேகை இனிக்கிருன்: பாலாக இனிக் கிருன். அவனுடைய அருள் பெற்ற பின் உலகத்துப் பொருள்களின் உண்மை புலகிைறது. சூரியனது ஒளி யில்ை இருளில் ஒன்றும் தெரியாமல் இருந்த பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/9&oldid=610067" இலிருந்து மீள்விக்கப்பட்டது