பக்கம்:பேசாத நாள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளக் கிழி ・ 51

இயலாது. இன்பவாழ்வில் இணையற்று கிற்கும் அமரலோக வாசிகளெல்லாம் போற்ற நிற்பவன் இறைவன். அவர் களுக்குள் தலைவனகிய இந்திரன் ஐராவதத்தில் ஏறிப் பவனி வருகிருன் இறைவன் அந்தத் தலைமைப் பதவியை அவ னிடமிருந்து பெற்றுக்கொண்டு தானே அமரர் நாடு ஆளும் அதிபதியாய் ஐராவதமீதேறிச் செல்லலாம். அதை இறை வன் விரும்பவில்லை. அமரர் தம் நலத்தையே எண்ணுபவர் கள். மன ஒருமைப்பாடு இல்லாதவர்கள். இறைவனுடைய உண்மை இயல்பை உணராதவர்கள். அவர்கள் ஆத்ம சமர்ப்பணம் செய்ய அறியாதவர்கள். இறைவனும் அவர் களும் ஒட்டி வாழ்வது இயலாது. இன்று தமக்குத் துன்பம் வந்தால் நீயே பெரியவன் என்பார்கள். நாளேத் துன்பம் நீங்கிவிட்டால் நானே பெரியவன், நானே பெரியவன் என்று செருக்குற்றிருப்பார்கள். அந்த இடத்தில் ஆண்டவன் தன் அதிகாரத்தைக் காட்டுவானேயன்றி அருளேக் காட்டமாட்டான். w -

ஏழைக் குழந்தைகளாகிய மக்களிடந்தான் இறை வனுக்குக் கருணை பிறக்கும். அவர்களுக்காக அவன் இறங்கி வருவான். ஏழை மனிதர்கள் எத்தனே அறிவில் லாதவர்களாக இருந்தாலும் தன்னே எண்ணி ஏங்குப வர்கள் என்பதை அவன் அறிவான். மனிதர் கூட்டத்தில், தான் தன் உருவை உயிரா வண்ணம் இருந்து உள்ளக் கிழியில் எழுதும் அன்பர்கள் இருக்கிருர்கள் என்பதையும் அவன் உணர்வான். ஆதலால் தன்னுடைய அருள் விளை யாடல்களே இந்த உலகத்திலே காட்டுவதுதான் அவ' னுடைய திருவுள்ளக்கிடக்கை. அவனுக்கு விளையாட்டிட்ம், பூமி. அவன் இரக்கத்துக்குரியவர்கள் மனிதர்கள். அவன் இங்கேவந்து திருவிளையாடல் புரியும் இடங்களே தலங்கள். இந்த நிலவுலகில் வந்து விளையாடல் புரிந்த கதை ஒன்ரு இரண்டா? பாண்டி நாட்டில் மதுரையிலே சுந்தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/57&oldid=610115" இலிருந்து மீள்விக்கப்பட்டது