பக்கம்:பேசாத பேச்சு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசாத பேச்சு

சும்மா இருக்கிற சாமியார்

வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் ” என்ற பழ மொழியைக் கண்டு ஏமாந்து போகிறவர்கள் பலர். பேசப் பழகிக் கொண்டால் காரியத்தைச் சாதித்து விடலாம் என்று நாம் நினைக்கிருேம். பேசியும் பார்க்கிருேம். ஆனல் உண்மையிலே நன்முகப் பேசத்தான் வருகி றதா ? கேட்பவர்களெல்லாம் விரும்பும்படியாகப் பேசுவதென்பது

தனி. எல்லோருக்கும் அந்தப் பாக்கியம் கிடைப்பதில்லை. வார்த்தை பதினுயிரத்தொருவர் ” என்று சொல் கிருர்கள். பதினுயிரம் பேருக்கு ஒருவரே நன்ருகப் பேசத் தெரிந்தவர்கள் உலகத்தில் இருக்கக்கூடுமாம். மற்றவர்கள் எல்லாம் பேசக் தெரிந்தும் தெரியாதவர்கள் என்றுதானே கொள்ளவேண்டும் ? .

ు :

பேசுவதைப்பற்றி அப்புறம் பேசிக் கொள்வோம். பேசாமல் இருப்பதைப்பற்றிக் கவனிக்கலாம். பெரியவர்கள் என்ன சொல்கிருர்கள்? பேசுவதைக் காட்டிலும் பேசாமல்

இருக்கிறது பிரம்மப் பிரயத்தனமாம் இதென்ன வேடிக் . கையாய் இருக்கிறதே நன்ருகப் பேச வேண்டுமென்ற

ஆசை உடையவர்களுக்குத்தான் பாஷையில் பயிற்சி வேண்டும் ; உபமானங்கள் சொல்லத் தெரிய வேண்டும்

பழமொழிகளே நடுநடுவே சொல்ல வேண்டும் ; பேரறிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/10&oldid=610165" இலிருந்து மீள்விக்கப்பட்டது