பக்கம்:பேசாத பேச்சு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 . பேசாத பேச்சு

களுடைய நூல்களிலிருந்து மேற்கோள் சொல்லத் தெரிய வேண்டும் : உசிதமாகப் பேச, அளவாகப் பேச, ஹாஸ்யச் ← ©©Ꮧ கலந்து பேசத் தெரிந்து கொள்ளவேண்டும் ; இப்படி எத்தனையோ இலக்கணங்களை வகுத்திருக்கிரு.ர்கள். நாலு பேருடன் சம்பாஷணை செய்வதற்குத் தனியாற்றல் வேண்டும்; சபையில் கின்று பேசுவதற்குக் கட்டுரை வன்மை இருக்கவேண்டும் என்று சொல்லி அவற்றைக் தனிக் கலைகளாகப் போற்றிப் பாராட்டுகிருர்கள்.

இந்தச் சங்கடங்களே வேண்டாமென்று வாயை மூடிக்கொண்டிருக்கலாமே என்ருல், அப்படி இருப்பது முடியவே முடியாது என்றல்லவா பெரியவர்கள் சொல் கிருர்கள்? கடவுள் ஊமைகளுக்கு வாயைக் கொடுத்தாலும் பேசும் சக்தியைக் கொடுக்கவில்லை. ஆகையால் ஊமைகள் பேசாமல் ஜாடைகளாலே தங்கள் காரியங்களே நடத்திக் கொள்ளலாம். அவர்கள் அப்படிச் செய்வதில்லை. அவர் களும் பேசுகிருர்கள். ஆம் , அந்தப் பேச்சு நமக்குப் புரிவதில்லையே யொழிய அவர்கள் என்னவோ பேசத்தான் பேசுகிருர்கள். காா புரா என்று சத்தம் போடுகிருர்களே, அதுதான் அவர்கள் பேச்சு. கம்பர்கூட இதைக் குறித்துச் சொல்லியிருக்கிரு.ர். - மூங்கையான் பேச அற்ருன்

என்னயான் மொழிய லுற்றேன்

என்று சொல்கிருர் வால்மீகி முனிவரும் கோசல நாட்டை வருணித்திருக்கிருர், அதே நாட்டை நானும் வருணிக்கப் போகிறேன். எல்லோரும் உதட்டை

அசைத்து நாக்கைச் சுருட்டி என்னவோ செய்கிருர்களே என்று கவனித்த ஊமை இயல்பாகவே காா புரா என்று கத்துவான். அதோடு அவன் கள்ளை வேறு குடித்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/11&oldid=610166" இலிருந்து மீள்விக்கப்பட்டது